Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு சந்தேகமா இருக்கு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் நடந்த சோகம்…!!

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் வெங்கட் சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த மாதம் 25ஆம் தேதி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கணவன், மனைவி இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் வெங்கட் சிவாவிற்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டதால் மீண்டும் கொரோனா தொற்று வந்திருக்குமோ என்று மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தான் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து வெங்கட் கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |