குடிப்பழக்கத்தை விடுமாறு கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐயனார் நகரில் ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்துவந்த விஸ்வராஜ் என்பவரை காதலித்து கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஸ்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விஸ்வராஜ் பிளேடால் தனது கையை அறுத்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பின் அவர் குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து சிகிச்சை முடிந்த பிறகு யுவராஜ் தனது மாமியார் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டார். இந்நிலையில் தனது வீட்டிற்கு சென்ற விஸ்வராஜ் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.