வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் மேற்குத் தெருவில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய அம்மா, அப்பா இருவருக்கும் உடல் நலம் சரி இல்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்ற சிராஜூதீன் கரிச்சான் பகுதிக்குஎதிரே இருக்கும் கருவை காட்டுக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்புல்லாணி போலீசார் அவரின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிராஜுதீன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.