மனைவியின் மீது சந்தேகப்பட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி சாலையில் பழ கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மாரிமுத்து அவரை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாசம் மனமுடைந்த குரு செல்வி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதன் பின் மனைவி இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த மாரிமுத்து திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராஜபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது உறவினரிடம் விசாரித்து வருகின்றனர்.