திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் நடேசன் நகர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவன் என்ற மகன் உள்ளார். கேசவனுக்கு தலையில் வழுக்கை விழுந்த காரணத்தால் பெங்களூருக்கு சென்று செயற்கை முறையில் முடி வைத்துள்ளார். அதன் பிறகும் கேசவனுக்கு திருமணம் செய்வதற்கு எந்த ஒரு பெண்ணும் அமையவில்லை. இந்நிலையில் திருமணம் ஆகாததால் விரக்தி அடைந்த கேசவன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மயங்கி விழுந்த அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் கேசவன் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து அரக்கோணம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.