இத்தாலி நாட்டில் சுமார் 12,042 பெப்சி பாட்டில்களை சேமித்து ஒரு நபர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
இத்தாலியில் வசிக்கும் 52 வயதுடைய கிறிஸ்டியன் என்ற நபர் உலகிலேயே அதிகமான பெப்சி பாட்டில்களை சேமித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். இவர் உலகில் இருக்கும் அனைத்து கண்டங்களில் இருந்தும் 12,042 பெப்சி பாட்டில்கள் சேமித்திருக்கிறார். ஜவுளி நிறுவனம் ஒன்றில் மேலாளராக இருக்கும் இவர் கடந்த 1989 ஆம் வருடத்தில் இருந்து பெப்சி பாட்டில்களை பொழுதுபோக்காக சேமித்து வந்திருக்கிறார்.
He got his first Pepsi can in 1989, now he has over 12,000 unique versions! 😲 pic.twitter.com/tgncPEyFbq
— Guinness World Records (@GWR) July 7, 2022
இவர் இதற்கு முன்பு கடந்த 2004 ஆம் வருடத்தில் 4396 பெப்சி பாட்டில்களை சேகரித்து முதல் தடவையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். தற்போது தன் சாதனையை தானே முறியடித்து சுமார் 12,042 பாட்டில்களை சேகரித்து மீண்டும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.