கட்டிட வேலைக்கு சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் 15 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு அதன் பின், படிப்பை தொடராமல் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை சக்கரமல்லூர் சின்னம்மா பேட்டை பகுதியில் வசித்து வரும் எலக்ட்ரீசியன் சதீஷ் என்பவர் அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனைதொடர்ந்து ஆதமங்கலம் புதூர் பகுதியில் வசித்து வந்த கட்டிட மேஸ்திரி ஏழுமலை என்பவரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் வாசுகி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சதீஷ், ஏழுமலை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.