சுவிட்சர்லாந்தில் தன் நண்பரை நம்பி லாட்டரி சீட்டை கொடுத்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு நபர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன் லாட்டரி சீட்டை நண்பரிடம் கொடுத்து பரிசு விழுந்திருக்கிறதா? என்று பார்த்து வருமாறு கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் வந்த அவரின் நண்பர் லாட்டரியில் 2,300 சுவிஸ் பிராங்குகள் பரிசு விழுந்ததாக கூறி பணத்தை கொடுத்திருக்கிறார்.
மகிழ்ச்சியடைந்த அவர் தன் நண்பரிடம் 200 சுவிஸ் பிராங்குகள் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அவரின் நண்பர் லாட்டரி டிக்கெட் புகைப்படம் உன்னிடம் இருந்தால் அதை அழித்து விடு என்று கூறியதால் இவருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, உடனடியாக லாட்டரி சீட்டுடன் அவரே சென்று விசாரித்திருக்கிறார்.
அப்போது தான் அவருக்கு 46,000 பிராங்குகள் பரிசாக விழுந்திருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. நண்பரை முழுமையாக நம்பி லாட்டரி சீட்டை கொடுத்ததற்கு அந்த நபர் வெறும் 2300 பிராங்குகளை கொடுத்து ஏமாற்றிவிட்டார். எனவே அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவரின் நண்பருக்கு 4,000 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை லாட்டரியை வென்றவருக்கு முழு தொகையும் கிடைக்கவில்லை. அதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.