காட்டு யானை தாக்கியதால் வியாபாரி காயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டு வியாபாரியான வெங்கடேஷ் என்ற வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்குள்ள புதர் மறைவில் நின்று கொண்டிருந்த யானை சற்றும் எதிர்பாராத நேரத்தில் வெங்கடேஷை தாக்கியுள்ளது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானையை விரட்டி உடனடியாக படுகாயமடைந்த வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவ்வாறு காட்டுயானை தாக்கி வியாபாரி படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது