Categories
உலக செய்திகள்

இதுனால கொரோனாவை தடுக்க முடியாது..! அலட்சியமாக சுற்றி திரிந்தவர்… காவல்துறையினர் கடும் நடவடிக்கை..!!

பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் பணியாற்றி வரும் நிலையில் ரயில் பயணத்தின் போது மாஸ்க் அணியாமல் சென்றதால் அவர் சிறை தண்டனையை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த Benjamin Glynn என்பவர் மாஸ்க் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி மாஸ்க் அணியாமல் சிங்கப்பூரில் பல இடங்களிலும் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்து விட்டு கடந்த மே மாதம் ஏழாம் தேதி குடியிருப்புக்கு திரும்பி வருவதற்காக ரயிலில் பயணம் செய்த அவர் மாஸ்க் அணியாமல் வந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த ஒருவர் அவருடைய அலட்சியத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்தில் பரப்பியுள்ளார். அது அனைவராலும் கவனிக்கப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் காவல்துறையினரின் பார்வைக்கும் சென்றுள்ளது.

இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பொது இடங்களில் மக்களுக்கு தொல்லையை ஏற்படுத்தியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீதான இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே சமயம் அவருடைய கடவுச் சீட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.

Categories

Tech |