பூனைகளை வாஷிங்மெஷினில் போட்டு கொலை செய்த காணொளி வெளியாகி பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
மலேசியாவில் ஒருவர் பூனைகளை வாஷிங்மெஷினில் பிடித்து போடும் காணொளி கிடைக்கப்பெற்றுள்ளது. வெளியான அந்த காணொளியில் மூன்று பூனைகளை ஒருவர் பிடித்து வெவ்வேறு வாஷிங்மெஷினில் போட்டு ஆன் செய்து விடுகிறார். பின்னர் அவர் அங்கிருந்து செல்ல பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக இயங்கிவந்தது சலவை நிலையமான அங்கு மற்றொரு பெண் துணி துவைப்பதற்காக வந்துள்ளார். ஒரு வாஷிங் மிஷினை திறந்தபோது பூனை இருப்பதை கண்டு அதிர்ந்து மற்றவர்களையும் திறந்து பார்த்துள்ளார்.
மூன்று வாஷிங்மெஷினில் பூனைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்ததைக் கண்டு அவற்றை மீட்பதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் பூனைகள் உயிருடன் மீட்கப்படவில்லை இதனைத்தொடர்ந்து அப்பெண் காவல்துறையினரை அழைக்க அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவரின் விபரங்கள் வெளியாகாத நிலையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூபாய் 17,57,967அபராதமும் மூன்று வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என நம்பப்படுகின்றது.