பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கட்டகுலம் பகுதியில் முனிஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேகா என்ற மனைவி உள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வின்சன்ட் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் வின்சென்ட் குடும்பத்தினர் அப்பகுதியில் நடந்து சென்ற ரேகாவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வின்சென்ட்டை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.