திருமணம் செய்து கொள்வதாக கூறி வாலிபர் 12-வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவி தனது உறவினரான ராம்கி என்பவரது வீட்டில் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராம்கி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன்பின் ராம்கி அந்த மாணவியை கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராம்கியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.