பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கூலித்தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கேசவன் அந்த மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த மாணவியை கேசவன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.
இதற்கு கேசவனின் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கேசவன் மற்றும் அவரது குடும்பத்தினர் 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்துள்ளனர்.