டெங்குவை கட்டுபடுத்த திமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதியில் டெங்கு பரவி வருகின்றது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக அரசும் , சுகாதாரத்துறையும் டெங்குவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் டெங்கு பரவாமல் இருக்க திமுக சார்பில் நிலவேம்பு கஷாயம் வழங்கு நிகச்சி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதை அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின் கூறுகையில் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாமுல் வாங்குவதற்கு எவ்வளவு தீவிரமாக இருந்தாரோ அது போன்ற தீவிரத்தை டெங்குவை கட்டுப்படுத்த முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கவனம் செலுத்த வேண்டும் . நிலவேம்பு கசாயத்தை காய்ச்சி பருகுவது டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இருக்கும்.திமுக சார்பு நிறுவனம் கசாயம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.