Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியார் குளிப்பதை படம் பிடித்த ஊழியர்…. குடும்பத்தினரின் செயல்…. போலீஸ் விசாரணை…!!

மாமியார் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து ஐடி ஊழியர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுண்ட பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணனின் மகளுக்கும் ஐடி ஊழியரான மனோஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் சமயத்தில் மனோஜ் தனது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் மனோஜ் தனது தாய், தந்தை, சகோதரி போன்றோருடன் இணைந்து மாமியார் குளிப்பதை மறைந்திருந்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அதனை இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி பாலகிருஷ்ணனை மனோஜ் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் மனோஜ், அவரின் தந்தை தர்மராஜ், தாய் கோமதி, சகோதரி சுகன்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |