மாம்பழம் என்று கேட்டாலே, நாக்கில் எச்சி ஊறுகிறதா? பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழம் தான், மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது இல்லை, அதில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அத்தனை ஆற்றல் இருக்கிறது மாம்பழத்திற்கு.
மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் இருக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் இருக்கிறது. பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்களும் இதில் வளமாகக் காணப்படுகிறது.
இது போக க்யூயர்சிடின், பீட்டா கரோட்டின் மற்றும் ஆஸ்ட்ராகாலின் போன்ற ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்கள் நிறைய உள்ளன. இந்த சக்தி வாய்ந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பான்களுக்கு இயங்கு உறுப்புகளை நடுநிலையாக்கும் சக்தி உள்ளது. இயங்கு உறுப்புகளால் அணுக்கள் பாதிக்கப்பட்டு ஏற்படும் நோய்களே இருதய நோய்கள், குறித்த காலத்திற்கு முன் வயதிற்கு வருதல், புற்று நோய் மற்றும் சிதைத்தல் நோய் சரி செய்யும்.
இரத்த அழுத்தம் :
மாம்பழத்தில் உள்ள வைட்டமின்களின் மிகவும் அதிகம். நமக்கு அனைத்து வழிகளிலும் நல்ல உடல் நலத்தை கொடுக்கும் . வளமான அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ள மாம்பழம் அதிக இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இயற்கை மருந்தாக அமைகிறது.
கொலஸ்ட்ரால்:
மாம்பழத்தில் அதிக அளவு பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைத்திட உதவும்
எடை அதிகரிக்க உடல் எடையை அதிகரிக்க மாம்பழம் சாப்பிட்டால் சுலபமாக எடையை அதிகரிக்கலாம். 150 கிராம் மாம்பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளன. இதை உடல் சுலபமாக ஈர்த்துக் கொள்ளும். மேலும் மாம்பழத்தில் உள்ள மாச்சத்து அதனை சர்க்கரையாக மாற்றுவதால், எடையை அதிகரிக்க அது உதவும்.
இரத்த சோகை:
மாம்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு இகர்ப்பிணிகள் கர்ப்பமான பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகளவில் தேவைப்படுவதால், அவர்கள் மாம்பழம் உண்ணுவது மிகவும் அவசியம். பொதுவாக கர்ப்பக் காலங்களில் இரும்புச்சத்து உள்ள மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதற்கு பதில் வளமான இரும்புச்சத்துள்ள சாறு நிறைந்த மாம்பழங்களை உண்ணுதல் சாலச் சிறந்தது.
மாம்பழங்களை ஒழுங்காகவும் தேவையான அளவும் உட்கொண்டால் குருதியின் அளவை அதிகரித்து இரத்த சோகையை சரி செய்யும்.
முகப்பரு:
முகப்பருவை சரிப்படுத்த மாம்பழம் மிகவும் உதவுகிறது. ஏனெனில் சருமங்களில் அடைப்பட்ட துவாரங்களை விடுவிக்க அது உதவும். இந்த துவாரங்கள் திறந்தவுடன் முகப்பருக்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். அடைப்பட்ட துவாரங்களை நீக்கி விடுவதே முகப்பருவை நிறுத்த உதவும் சிறந்த வழி. இந்த பயனை அனுபவிக்க எப்போதும் மாம்பழம் சாப்பிட வேண்டியதில்லை. அதற்கு செய்ய வேண்டியதெல்லாம் மாம்பழ கூழை எடுத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விட வேண்டும்.
இளமை:
மாம்பழங்களில் உள்ள அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, புரதத்தை உடலில் அதிகம் சுரக்க உதவி பசெய்கிறது. இரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத் திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால், வயதான தோற்றத்தை வெளிப்படுத்துவதை மாம்பழம் தள்ளி போடும்.
மூளை வளர்ச்சி:
நோய் எதிர்ப்பு சக்தி கேரட் மற்றும் மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா-கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ளது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலிமைப்படுத்த மாம்பழத்தில் உள்ள மேற்கூறிய தனிமங்கள் உதவி செய்கின்றன.
சர்க்கரை நோய்:
இன்னும் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், சில ஆய்வின் படி, மாம்பழம், சர்க்கரை நோய்க்கான இயற்கை மருந்து. மாம்பழத்தில் உள்ள இனிப்புச்சத்தால், சர்க்கரை நோயாளிகள் அதை கண்டிப்பாக உண்ணக் கூடாது என்ற நம்பிக்கை நீண்ட நாட்களாகவே உள்ளது. அது தவறாகும், மாம்பழத்தை தவிர அதன் இலைகளும் கூட சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்தாகும்.
கண்களின் ஆரோக்கியம்;
ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 25 விழுக்காடு வைட்டமின் ஏ சத்தை, ஒரு கப் நறுக்கிய மாம்பழங்கள் தருகின்றன. கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மேலும் மாலைக் கண் மற்றும் வறட்சியான கண்களை தடுக்கும்.