Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் ”மாமனிதன்”….. வெளியான சூப்பர் அப்டேட்….. என்னன்னு பாருங்க….!!!

விஜய்சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல், விடுதலை போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது.

மாமனிதன் படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட விஜய் சேதுபதி || Tamil cinema  Maamanithan new update

இதனையடுத்து, இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தில் காயத்ரி, அனிகா, குரு சோமசுந்தரம் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எம், சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பிரபல ஆர்கே சுரேஷ் இன்ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Categories

Tech |