உத்திரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் பெயரில் நோட்டீஸ் ஒன்று பரவி வந்தது கொண்டிருக்கிறது.
அந்த நோட்டீஸில் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் ஒவ்வொரு மாணவிக்கும் குறைந்தது ஒரு ஆண் நண்பர் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இது பாதுகாப்பு கருதி தெரிவிக்கப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆண் நண்பர்கள் இல்லாத மாணவிகள் யாரும் பிப்ரவரி 14க்கு பின்னர் கல்லூரிக்குள் நுழைய அனுமதி இல்லை எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள், இந்த விஷயத்தை கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். அதன்பிறகே, இது போலியாக வலம் வரும் நோட்டீஸ் என்றும், கல்லூரியின் பெயரை கெடுப்பதற்காக செய்யப்பட்ட சதி என்பதும் தெரியவந்தது. மேலும், அந்த நோட்டீசை புறக்கணிக்குமாறும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.