Categories
தேசிய செய்திகள்

30 ஆண்டுகள் பெண்ணாக வாழ்ந்து வந்த ஆண்… பரிசோதனையில் மருத்துவர்கள் கண்ட பேரதிர்ச்சி… உண்மை என்ன?

30 வருடங்கள் பெண்ணாக வாழ்ந்தவர் உடல்நலக் குறைவினால் சிகிச்சை எடுக்க சென்றபொழுது அவர் ஆண் என்பது தெரியவந்துள்ளது

கொல்கத்தாவில் கடந்த 30 வருடங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வந்த பெண்ணிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பெண் இல்லை ஆண் என்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவருக்கு திருமணம் முடிந்து ஒன்பது வருடங்கள் ஆகிய நிலையில் சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து கொல்கத்தாவில் இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புற்றுநோய் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவரை மருத்துவர்கள்  பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது தோற்றத்தில் பெண்ணாக இருக்கும் இவரது குரல், மார்பகங்கள், பிறப்புறுப்பு போன்றவை பெண்களுக்கு இருப்பது போன்றே அமைந்திருக்கும். ஆனால் இவருக்கு பிறந்ததிலிருந்து மாதவிடாய் வருவதில்லை. கருபப்பையும் கிடையாது. சிகிச்சை எடுக்க வந்த அவருக்கு நாங்கள் பரிசோதனைகளை மேற்கொண்டப்போது அவரது உடலில் விந்தனுக்கள் வளர்ச்சி அடையாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம்.  இதன் காரணமாகவே அவரது ஹார்மோன்கள் அவருக்கு பெண் தோற்றத்தை கொடுத்துள்ளது.

அதோடு அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து  கீமோ தெரபி சிகிச்ச அவருக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.சிகிச்சைக்கு வந்த நபர் இது குறித்து அறிந்த போது அவர் எவ்வாறு எடுத்துக் கொண்டார் என செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்த மருத்துவர்கள்.  அவர் பெண்ணாகவே வளர்ந்துள்ளார். கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆண் ஒருவருடன் திருமணம் முடிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அவர்களது வாழ்க்கையை தொடர்வது குறித்து மன நல ஆலோசனை வழங்கப்படும்.  இரண்டு முறை கருத்தரிக்க முயற்சித்த போதும் தோல்வியடைந்துள்ளனர். அவரது உறவினர்கள் இருவருக்கு  இந்த பிரச்சனை இருந்தது தெரிய வந்துள்ளது. 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு வரக்கூடிய நோய் இது இவரைத் தொடர்ந்து இவரது சகோதரிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவரும் ஆண் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |