Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மழையால் அழுகிய பயிர்கள்” அதிர்ச்சியில் மயங்கி விழுந்த விவசாயி…. பின் நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பயிர்கள் அழுகியதை பார்த்த அதிர்ச்சியில் விவசாயி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள புதுக்குடி கிராமத்தில் விவசாயி ராமலிங்கம் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்த தம்பதியினரின் மகன் ஏற்கனவே இறந்து விட்டார். இதில் கணவன்-மனைவி இருவரும் அதே கிராமத்தில் 1 ஏக்கர் பண்ணை நிலத்தை குத்தகைக்கு எடுத்து சம்பா சாகுபடி செய்து வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பெய்த மழையால் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகிவிட்டதாக தன் குடும்பத்தினரிடம் ராமலிங்கம் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து ராமலிங்கம் விவசாய பணிக்காக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது பயிர்கள் அழுகியதை பார்த்த அதிர்ச்சியில் ராமலிங்கம் வயலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆயிஷா பேகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ராமலிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |