மழைக்காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல் அரசியல் செய்வது தவறானவை என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
மழைக்காலத்தில் மக்களுக்கு உதவி செய்யாமல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்று கனிமொழி கூறியுள்ளார். சென்னை தி நகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் பலமுறை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவை ஒருநாளில் உருவாக்கப்பட்ட பிரச்சினை இல்லை. மேலும் நீர்வழிப் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குழப்பம் இருக்கிறது.இவற்றை சரிசெய்த பின்னர் முழுமையான திட்டம் வகுக்கப்படும். மேலும் மழைக்காலங்களில் மக்களுக்கு உதவி செய்யாமல் அரசியல் செய்வது தவறானவை என்று அவர் கூறியுள்ளார்.