Categories
உலக செய்திகள்

மக்களின் மனதை கவர்ந்த பிரதமர்… நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி…!!!

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கைல்லாத தீர்மானத்தில்  178 வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளார். மேலும் இந்த நம்பிக்கை இல்லாத வாக்கெடுப்பை எதிர்க்கட்சியினர் புறக்கணித்து வருகின்றனர். ஆகவே நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் வியாழக்கிழமை அன்று நம்பிக்கை வாக்கெடுப்பை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில் நிதி அமைச்சர் அப்துல் ஹபீஸ்  ஷேக் தோற்கடிக்கப்பட்டதும்  பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்கட்சியினர் தெரிவித்தனர்

இந்நிலையில் தனது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சாரம் செய்த இம்ரான் கானுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம்( பி. டி.எம்) வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான யூசுப் ராசா கிலானி பாகிஸ்தான் தெஹ்ரீக்- இ – இன்சாஃப் (பி.டி.ஐ ) வேட்பாளர் அப்துல் ஹபீஸ் ஷேக்கை புதன்கிழமை தோற்கடித்துள்ளார்.

மேலும் இம்ரான்கான் ஆட்சியை கவிழ்க்க கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட பி .டி.எம் என்ற 11 கட்சிகள் கூட்டணிகளாகும். இவர்களின் கூட்டணியால் அரசாங்கத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு புறக்கணிக்கப்பட்டு எதிர்க்கட்சியை இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு சோதனை நடந்து முடிந்தது.

Categories

Tech |