Categories
தேசிய செய்திகள்

மக்களே! RuPay டெபிட் கார்டு, BHIM பரிவர்த்தனைகளுக்கு இனி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

RuPay டெபிட் கார்டு, BHIM UPI மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனை செய்பவருக்கு பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக RuPay டெபிட் கார்டு மற்றும் BHIM மூலம் பரிவர்த்தனை செய்பவருக்கு அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை பரிசு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்த சிறிய அளவிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யும் பயனர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்குவதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியுள்ளார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தும் வகையில் அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Categories

Tech |