தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் நாளை 5 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அரவிந்த், நாளை குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள 5-வது மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் 22 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அதன் படி குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய பகுதியில் இருந்து 2 நபர்களும், நாகர்கோவில் மாநகராட்சிலிருந்து 2 நபர்களும், மற்றும் மாவட்ட அளவில் 2நபர்களும் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களும், 2வது தடுப்பூசி செலுத்தப்பட உள்ளவர்களும் முகாமிற்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.