Categories
தேசிய செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளர் கொரோனாவால் மரணம்..!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி அமைப்பாளர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் சுப்பிரமணியம் (வயது 70) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.. இவர் 1985-1990 வரை உருளையன் பேட்டை தொகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.. பின்னர் 2001-2006, 2006-2011 ஆகிய 2 முறை முதலியார்பேட்டை தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.

மேலும் 2012-2014 ஆம் ஆண்டு வரை திமுக அமைப்பாளராகவும், 2018ஆம் ஆண்டுமுதல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில அமைப்பாளராகப் பொறுப்பில் இருந்தார். இவரது தந்தையும்  சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் ஆவார்.. இவரது மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான கமல் ஹாசன் உட்பட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Categories

Tech |