தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1/2 கப்
புட்டு மாவு [அ ] அரிசிமாவு – 1/2 கப்
வறுக்காத ரவா – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளிக்காத தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , அரிசிமாவு , ரவா , உப்பு, மிளகு , சீரகம் , கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து கலந்து தயிர் , தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துக் கொள்ள வேண்டும் . 15 நிமிடங்கள் கழித்து சூடான தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் திருப்பி போடாமல் வேகவைத்து எடுத்தால் சூப்பரான மொறு மொறு கோதுமை தோசை தயார் !!!