நான் சூலாயுதத்தை எடுத்தால் பாஜகவினரும் சூலாயுதம் எடுப்பார்கள் என சீமான் விமர்சித்துள்ளார்.
நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, நாங்கள் தேர்தலுக்கு எப்போது தயாராகிவிட்டோம். எப்போது தேர்தல் வந்தாலும் நாங்க இறங்கி வேலை செய்வோம். திமுக வெற்றி பெறுவதை தடுப்பதற்கும், அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு மறைமுகமாக நாம் தமிழர் வாக்குகள் சிதறும் என்ற கேள்விக்கு, இப்படியே பேசிக்கொண்டே இருக்க வேண்டியதான். நாங்க களத்தில் நிற்பது நாங்கள் வெற்றி அடையத்தான்.
பிஜேபி ஜெயிக்க வைக்கிறதுக்கு, அதிமுக ஜெயிக்க வைக்கிறதுக்கு, திமுக ஜெயிக்க வைக்கிறதுக்கு அல்ல. நாம் தமிழர் தேர்தலில் போட்டியிடுவது நாம் தமிழர் வெல்வதற்கு தான். எனக்கு ஒரு கோட்பாடு இருக்கு, எனக்கு உயர்ந்த நோக்கம் இருக்கு அதை நிறைவேற்ற தான் நான் போறேன். நான் வென்றதும் தலைவன் பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடும். நான் வென்றால்தான் கச்சதீவை மீட்க முடியும், இவர்கள் மீட்க மாட்டார்கள்.
என்னை முதலமைச்சறாக்கீருங்க… கச்சத்தீவை கொடுத்தது கொடுத்ததுதான் என்று இந்திய அரசு சொல்ல சொல்லுங்க பாப்போம். எனக்கு ஒரு நோக்கம் இருக்கு, அதனால தான் நான் சண்டை போட்டுக்கிட்டு போய்க்கொண்டிருக்கிறேன். எனக்குனு இருக்கற வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். எனக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள். ரஜினி வாக்காளர்கள் என்னக்கு போடமாட்டார்கள், ரஜினிக்கு தான் போடுவார்கள்.
என்னுடைய வாக்காளர்கள் தான் எனக்கு வாக்கு செலுத்தமுடியும். எனக்கு 17 லட்சம் பேர் ஓட்டு போட்டு இருக்காங்க, அவர்களுக்கு உண்மையாக இருக்குன்னு நான் நினைக்கிறேன், போராடுகிறேன். பாஜக தனித்து நிற்குமா ? நீ என்னை தாண்டி வாக்கு பெறுமா ? அது இந்திய கட்சியா இருக்கட்டும், நாட்டின் பிரதமராக இருக்கட்டும்… எது வேனாலும் இருக்கட்டும். எங்களை மாதிரி தனித்து நிக்குமா. எண்ணையை விட வாக்கு வங்கி வைத்துள்ளதா ?
அவர்களுக்கு தனி அரசியல் இருக்கா ? நான் ”வேல்” எடுத்தால் நீங்கள் வேல் எடுப்பீங்கள். இப்ப சூலாயுத எடுக்க போறேன்… நாளையிலிருந்து சூலாயுதத்தை எடுப்பீர்கள். உங்களுக்கு வேற என்ன இருக்கு ? என பாஜகவை நோக்கி சரமாரியாக கேள்விகளை அடுக்கினார்.