கும்பகோணத்தை புது மாவட்டமாக மாற்றக்கோரி போராட்டகுழு ஒன்று தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளது.
கும்பகோணத்தை மையமாக மையமாகக்கொண்டு புதிய மாவட்டமாக கும்பகோணம் அறிவிக்கப்படும் என சென்ற ஆண்டு சட்டசபையில் அமைச்சர் உதயகுமார் பேசினார். ஆனால் அதனை அறிவிப்பதில், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் கும்பகோணம் புதிய மாவட்டம் போராட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க தேவையான காரணங்களையும் , கும்பகோணத்தில் சிறப்புகளை புகைப்படமாக சேகரித்த தொகுப்புகளை பெரிய அளவிலான புத்தகமாக அச்சிட்டு அதன் முதல் பிரதியை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் போராட்டக் குழுவின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல், திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் ஒன்றியச் செயலாளர் உட்பட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போராட்டக் குழுவின் தலைவர் ம. க.ஸ்டாலின் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. இதுவரை பொறுத்தது போதும், இனி வரக்கூடிய நாட்களான ஜூன் 15, 20, 25, 30 ஆகிய தேதிகளில், அதாவது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தபால் அனுப்பும் போராட்டம், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு போராட்டம், அதனைத் தொடர்ந்து இறுதியாக உண்ணாவிரதப் போராட்டம் என தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.