பாஜக தலைமையிலான அரசு தமிழகத்துக்கு என்ன செய்துள்ளது என பட்டியலிட்டு காட்டவா என அமித் ஷா திமுகவுக்கு சவால் விடுத்துள்ளார்.
சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அநீதி இணைத்து விட்டது என்று கூறுவார். நான் இங்கே சென்னைக்கு வந்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். பத்து ஆண்டுகளிலேயே நீங்கள் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் அங்கம் வகித்தீர்கள். நீங்கள் இதுவரை தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று பட்டியலிடுங்கள் ? எங்கள் தரப்பில் நான் பட்டியல் கொடுக்க தயாராக இருக்கின்றேன் ? நீங்கள் அதற்கு பதில் கொடுக்க தயாரா? என அமித் ஷா சாவல் விடுத்தார்.
ஒரே ஒரு புள்ளிவிவரம் மட்டுமே இங்கு அளிக்க விரும்புகின்றேன். 2013 – 2014ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு மன்மோகன்சிங் அரசானது 16 ஆயிரத்து 155 கோடி ரூபாய்க்கான ஒதுக்கீடு செய்தது. கடந்த பட்ஜெட்டில் பட்ஜெட்டில் வரவு செலவு திட்ட அறிக்கையில் இந்த அரசானது 32 ஆயிரத்து 850 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. திட்டங்களுக்கும் மற்ற விஷயங்களுக்கும் தனியாக தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றை இதனை ஒட்டி நேரடி பணப் பரிவர்த்தனை வாயிலாக தமிழ்நாட்டு மக்களுக்கு கிட்டத்தட்ட 4,500 கோடி ரூபாய்கள் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. 108 கோடி கிலோ அளவிலான உணவு தானியங்கள் கடந்த 4 மாதங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி அரசால் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது. 3.36 கோடி அளவிலான பருப்பு வகைகள் இதே காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
தமிழ்நாட்டிலே 1.83 கோடி பெண் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 917 கோடி ரூபாய் நேரடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. உஜ்வலா திட்டத்தின் படி 52.76 லட்சம் ஏழை தாய்மார்களின் வீடுகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சி ஆகட்டும், கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடாகட்டும், ஏழைகள் நலமாக இருக்கட்டும் மோடி அரசு… மாண்புமிகு பழனிச்சாமி அரசு… உங்களோடு, ஏழைகளோடு, தமிழ் நாட்டு மக்களோடு தோளோடு தோள் நின்று உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை இந்த நேரத்திலே நான் உறுதிபடக் கூறுகிறேன் என அமித் ஷா தெரிவித்தார்.