ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக இனி அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று அரியானா அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவரும் தடுப்பூசி செலுத்துமாறு அரசு அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் 2022 ஜனவரி முதல் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று அரியானா அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்கள், பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவு ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.