வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பால மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் எதன் மூலமாக மக்களை ஏமாற்றி மோசடி செய்யலாம் என்று மர்ம நபர்கள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். இதனால் மக்களும் இந்த மர்ம கும்பலின் பிடியில் சிக்கி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் பறிக்கும் மோசடி கும்பல் ஒன்று உங்கள் மகள்/மகன் போன்று குறுஞ்செய்தி அனுப்பி பணம் உடனடியாக தேவைப்படுகிறது என்று கூறி மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இந்த கும்பல் இங்கிலாந்தில் பல மோசடிகளை செய்து வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் காணப்படுகின்றனர். ஆகவே மக்கள் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.