சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கதவணையில் பராமரிப்பு பணி நிறைவடைந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கோனேரிப்பட்டி கதவணை அமைந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சொக்கனூர் நீர்மின் நிலையம். கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர்மின் தேக்க நிலையம் மற்றும் நெருஞ்சிப்பேட்டை நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதியில் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நீர்த்தேக்க நிலையத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீர்மின் தேக்கக் அணைகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணி 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
இதனையடுத்து கோனேரிப்பட்டி நீர்தேக்க பகுதியிலுள்ள அனைத்து கதவணை மதகுகளும் திறந்து தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 15 நாட்கள் பராமரிப்பு பணி நிறைவு பெற்ற பின் கதவணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது. தற்போது கோனேரிப்பட்டி கதவணை ரம்மியமாக காட்சியளிக்கிறது.