லண்டனில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முக்கிய தகவலை புலனாய்வாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
லண்டனில் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சபீனா டெஸ்லா (28), கடந்த 17ஆம் தேதியன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றிருக்கிறார். அதன் பின்பு, அவரை காணவில்லை. அதற்கு மறுநாள் அருகிலிருக்கும் கேடர் என்ற பூங்காவில் சடலமாகத்தான் மீட்கப்பட்டார். இது நாடு முழுவதும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதன்பின்பு, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆசிரியை உடல் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகே இருந்த கண்காணிப்பு கேமராவிலிருந்து ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது. எனவே, அதன் அடிப்படையில் காவல்துறையினர் ஒரு நபரை தேடி வருகிறார்கள்.
அந்த கண்காணிப்பு கேமராவின் காட்சியில், வழுக்கை தலையுடன் கருப்பு நிறத்தில் ஹூடி கோட்டும், சாம்பல் நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து ஒரு நபர் செல்கிறார். அந்த நபர் சிவப்பு நிறத்திலான ஒரு பொருளை தன் கையில் வைத்துக்கொண்டு மறைத்தபடியே சென்று கொண்டிருக்கிறார்.
அந்த காட்சியை மீண்டும் ஆராய்ந்த புலனாய்வாளர்கள், அந்த பொருள் குளிர்பான கேனாக இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அதனை வைத்து தான், அந்த நபர் ஆசிரியரை, தாக்கி கொலை செய்திருப்பார் என்று தாங்கள் கருதுவதாக கூறியிருக்கிறார்.