தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை மயிலாடுதுறையில் உள்ள இளைஞர்களுக்கு 85 வயது முதியவர்கள் எந்தவித பிரதிபலனும் இன்றி இலவசமாக கற்றுத் தருகின்றனர்.
மயிலாடுதுறை திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி காட்டுமன்னார்குடி சேர்ந்த ராமசாமி ஆகிய இரண்டு முதியவர்களும் தங்களின் சிறுவயதிலேயே சிலம்பம் கற்றதால், 85 வயதை எட்டிய போதிலும் உடலை உறுதியுடன் வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து வசதி இல்லாத நிலையிலும் கொள்ளிடம் ஆற்றை கடந்து நாகை மாவட்டத்திற்கு வந்து ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு. இந்த தாத்தாக்கள் சிலம்பத்தை கற்றுத் தருகின்றனர். காதம்பம், துலுக்காணம், கள்ளபத்து, குறவஞ்சி, நாகபாசம், மடுவு உள்ளிட்ட சிலம்ப கலைகளில் எந்தவிதப் பிரதிபலனும் இன்றி அவர்கள் இலவசமாக பயிற்றுவிக்கின்றனர்.