மராட்டியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் அவசியம் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மராட்டியம் மாநிலத்தில் நேற்று முன்தினம் சட்டசபை நடத்தப்பட்டது. இந்த சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறுகையில். “மராட்டியத்தில் அரசு மற்றும் அதன் உதவி பெறும், தனியார் மற்றும் பல்வேறு விதமான கல்வி வாரியப் பள்ளிகள் என மொத்தம் 65 ஆரம்ப பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகளை கண்டறிவதற்கு கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும்.
மேலும் குற்றங்களை கண்டறிவதற்கு கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கும் வகையில் நாங்கள் ஹார்டு டிரைவையும் கட்டாயமாக்க உள்ளோம். இதனைத் தொடர்ந்து ஆசிரியை, பள்ளி மாணவ, மாணவிகள், அங்கன்வாடி ஊழியர்கள், டாக்டர் மற்றும் முதல்வர் அடங்கிய “சக்தி சாவித்திரி கமிட்டியை” உருவாக்கி அவர்களின் பெயர்கள் பள்ளி வளாகத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து கமிட்டியின் செயல்பாட்டை பள்ளி கல்வித் கமிஷனர் மேற்பார்வையிடுவார்” என்று கூறியுள்ளார்