மகாராஷ்டிராவில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
புனே மும்பை தானே பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் சூழ்ந்தது. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. இந்நிலையில் இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல் மேற்குகடற்கரை பகுதிகள் முழுக்க பலத்த மழை பெய்யக் கூடும் என்பதில் மும்பை தானே உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்துள்ளது.