மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து, தற்போது பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸின் தாக்கம் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றின் 2 ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் அம்மாநில அரசு, கடந்த 2 நாட்களுக்கு முன் ஊரடங்கை அமல்படுத்தியது. அதில் அம்மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் பகல் நேரத்தில் கடுமையான கட்டுப்பாடு போன்ற ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு டிருந்தது.
ஆனால் தற்போது இந்த 144 தடை உத்தரவானது இரவு நேரத்ததை போலவே,பகல் நேரத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 5 பேருக்கு மேல் கூட்டம் கூடக்கூடாது என்று போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 144 பகல்,இரவு தடை உத்தரவானது, வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை செயல்படும் என்றும் ,வாரத்தின் இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் அம்மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு செயல்படும் .இந்த ஊரடங்கு உத்தரவானது வருகின்ற 30 ஆம் தேதி வரை அமல்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .