இங்கிலாந்து மகாராணிக்கு கிறிஸ்மஸ் தினத்தன்று கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் தனக்கு 2 வருடங்களுக்கு முன்பாகவே ராஜ குடும்பத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தி மின்னஞ்சல் அனுப்பியதாக எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் மகாராணியான 2 ஆம் எலிசபெத்திற்கு கிறிஸ்மஸ் தினத்தன்று jaswant singh என்னும் 19 வயதுடைய நபர் கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த வீடியோ அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் saurav என்னும் எழுத்தாளர் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது இங்கிலாந்து மகாராணிக்குப் கொலை மிரட்டல் விடுத்த 19 வயதுடைய jaswant என்பவர் 2 வருடத்திற்கு முன்பாகவே தனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மின்னஞ்சலில் இந்தியாவிலுள்ள அமிர்தசரஸில் வைத்து இந்தியர்களை இங்கிலாந்து ராணுவ வீரர்கள் அநியாயமாக கொலை செய்த சம்பவத்தில் இளவரசர் பிலிப்பிற்கு சம்பந்தம் உண்டு என்று 19 வயதுடைய jaswant கூறியுள்ளார்.
ஆகையினால் அவர் உட்பட ராஜ குடும்பத்தினர்கள் வெளிப்படையாக மேல் குறிப்பிட்டுள்ள சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் jaswant கூறி தனது வெறுப்பை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.