மகாராணியார் காலனித்துவத்தின் சின்னம் என்பதால் அவருடைய படத்தை பிரபல சட்ட வல்லுனரது மகன் ஆக்ஸ்போர்ட் கல்லூரியிலிருந்து நீக்குவதற்கு வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க நாட்டின் பிரபல சட்ட வல்லுனரது மகனான Matthew katzman என்பவர் ஆக்ஸ்போர்ட் கல்லூரியிலிருக்கும் இங்கிலாந்து ராணியாரின் படத்தை நீக்குவதற்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் மகாராணியாரின் படத்தை நீக்குவது தொடர்பாக ஆக்ஸ்போர்ட் கல்லூரி மாணவர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் 1952 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட மகாராணியாரின் படம் மாக்தலென் கல்லூரியின் பொது அறையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து matthew கூறியதாவது, இங்கிலாந்து ராணியார் காலனித்துவத்தின் சின்னம் என்பதாலேயே அவருடைய படத்தை அப்புறப்படுத்துவதற்கு வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து மகாராணியின் படத்தை அப்புறப்படுத்தும் முடிவு மிகவும் ஆபத்தானது என்று கல்வித்துறை செயலாளரான கேவின் வில்லியம்சன் கூற்றுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.