Categories
உலக செய்திகள்

“ரொம்ப சந்தோசமா இருக்கு”… காதலர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி வெளியிட்ட இளவரசர் ஹரி…!!

பிரிட்டன் இளவரசர் ஹரியும்  அவரது மனைவி மேகன் மார்க்கெல்-லும் காதலர் தினத்தில் மகிழ்ச்சி செய்தியை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கெல் தனது காதல் கணவராகிய பிரிட்டனின் இளவரசர் ஹாரியுடன் அமெரிக்காவில் குடியேறியுள்ளார். இத்தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் மேகன் மார்க்கெல் இரண்டாவது முறையாக கருவுற்றிருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் தனது மகன் ஆர்ச்சி மூத்த சகோதரர் ஆகப் போகிறார் என்று மேகன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் .

இந்த தகவலானது அவர்களது நெருக்கமான உறவினர் வட்டாரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில்,  இளவரசர் ஹரியும்  அவரது மனைவி மேகன் மார்க்கெல்-லும் இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர் என்று அவர்களது செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |