மகரம் ராசி அன்பர்களே, இன்று விரயங்களை சுப விரயமாக மாற்றிக்கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். இன்று தெய்வீக வழிபாடு குதூகலத்தை கொடுக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் கொஞ்சம் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை கொடுக்கும்.
வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறு ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூல் தாமதமான போக்கே காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் ஏற்படும். இன்று முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், சிறப்பாகவே இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீளம் நிறம்