மகரம் ராசி அன்பர்களே.! மறைமுக வருவாய்கள் வந்து சேரும்.
இன்றைய நாள் உங்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் காத்திருக்கின்றது. குடும்பத்தில் உங்களுடைய கை ஓங்கி காணப்படும். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிரச்சினையை சரி செய்து கொள்வீர்கள். வேற்று மதத்தவர் உங்களுக்கு உதவிகளை செய்து கொடுப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உங்களுடைய நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்க முடியும். எதிர்பார்த்த உதவிகள் கூட கண்டிப்பாக கிடைக்கும். நிதி நெருக்கடி எல்லாம் சமாளித்து எல்லாவற்றிலும் சிறப்பாக செயல்பட்டு முன்னேற்றகரமான சூழலை அமைத்துக் கொள்ளக் கூடிய காலக் கட்டமாக இருக்கும். வெளிநாட்டு தொடர்புடைய முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும்.
மறைமுக வருவாய்கள் வந்து சேரும். விவாதங்களை தவிர்த்து கொள்ள வேண்டும். சுய முயற்சிகளில் முன்னேற்றமும் ஆடை ஆபரண சேர்க்கையும் இருக்கின்றது. காதலில் உள்ளவர்களுக்கு சிக்கல்கள் தீர்ந்துவிடும். ஓரளவு சிறப்பான அனுபவம் கிடைக்கும். கண்டிப்பாக காதலும் கைகூடிவிடும். மாணவர்களுக்கு நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். கல்வியில் மிகப்பெரிய மாற்றங்கள் எழக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள்