Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….! சிந்தனை அதிகமாக இருக்கும்….! முன்னேற்றம் கிடைக்கும்….!!

மகரம் ராசி அன்பர்களே.! எல்லா விதமான முயற்சியும் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

இன்று தேவையற்ற சிந்தனை மனதிற்குள் உருவாகிக்கொண்டிருக்கும். தேவையில்லாதவற்றை பேசி கொண்டிருப்பீர்கள். அதனை பற்றி நினைத்துக் கொண்டிருப்பீர்கள். சுற்றுப்புற சூழ்நிலைகளை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். சமூக பொறுப்புகள் வந்து சேரும். அதிகப்படியான உழைப்பு இருக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானது. அதிகப்படுத்த வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவேண்டும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தேவையான நிதி உதவி கண்டிப்பாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லா விதமான முயற்சியும் முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

பெண்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு எல்லா விதமான பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். மனிதர்கள் சந்தோஷம் பிறக்கும். மனதிற்கு பிடித்தவரை கண்டிப்பாக கரம்பிடிக்க முடியும். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். கல்வி மீது அதிக அக்கறை இருக்கும். மேற்கல்விகான எல்லாவிதமான விஷயங்களிலும் நல்லது நடக்கும். மாணவர்கள் பொறுப்பாக செயல்பட்டு இன்று முன்னேற்றகரமாக வழி நடத்திச் செல்வீர்கள். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம்உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை

Categories

Tech |