மகரம் ராசி அன்பர்களே, இன்று பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகள் பெறும் நாளாகவே இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும், விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சினை தலைதூக்கும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுங்கள்.
எந்த ஒரு பிரச்சனையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். அடுத்தவரிடம் கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள், மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்த தகவல்கள் உங்களுக்கு சாதகமாகவே வரும். பணவரவை பொருத்தவரை எந்த வித தடங்கலும் இல்லை. இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் உழைத்து பாடங்களைப் படியுங்கள்.
படித்ததை எழுதிப் பாருங்கள், ஆசிரியர்களிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்