Categories
தேசிய செய்திகள்

இன்று மட்டுமே அனுமதி…. சுவாமியை தரிசித்து சென்ற பக்தர்கள்…. நாளையுடன் நிறைவடையும் பூஜை…!!

சபரிமலை கோவில் மண்டல மகரவிளக்கு பூஜையானது நாளையுடன் நிறைவடையும் நிலையில் பக்தர்களுக்கு இன்று மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் களபாபிஷேகம் நடந்தது. இந்த விழாவானது கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் சுரேஷ் குமார் வர்மா மற்றும் பிரதீப் வர்மா போன்றோர் பங்கேற்றனர். இதனையடுத்து வழக்கமான பாரம்பரிய முறைப்படி தந்திரி, மேல்சாந்தி மற்றும் கீழ் சாநதிகளுக்கு மன்னர் குடும்ப பிரதிநிதிகள் பணமுடிப்புகளை வழங்கினார்கள். அதற்கு பின்  சபரிமலை கோவிலில் நெய் அபிஷேகம் நடைபெறாது என்றும், இன்று வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நடப்பு மண்டல மகர விளக்கு பூஜைகளின் நிறைவாக குருதி சமர்ப்பண சடங்கானது மாளிகைபுரத்துஅம்மன் கோவிலில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நாளை காலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமம் நடைபெற்று, சுமார் ஆறு மணிக்கு பந்தள மன்னர் குடும்ப பிரதிநிதிகள் சுவாமியை தரிசித்து சென்றபின் கோவில் நடையானது அடைக்கப்படும். அந்த சமயத்தில் மற்ற பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் மன்னர் குடும்ப பிரதிநிதிகளிடம் முறைப்படி ஐயப்பன் கோவில் கருவறையின்சாவியானது ஒப்படைக்கப்பட்டவுடன், அந்த சாவியை கோவில் மேல்சாந்தி ஜெயராஜ் என்பவர் போற்றி மீண்டும் அதனை பெற்றுக் கொள்வார். இதனை அடுத்து சன்னிதானத்தில் இருந்து திருவாபரணத்தை தாங்கிய பேழையுடன் பந்தளம் நோக்கி ராஜ குடும்பத்தினர் புறப்படுவர். அதோடு 2020 2021 ஆம் ஆண்டு மகரவிளக்கு  பூஜை நிறைவு பெற்றுவிடும். அதன்பிறகு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி மாசி மாத பூஜைக்காக மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |