Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…வேலை பளு அதிகரிக்கும்…சேமிப்பது அவசியம்…!

மகர ராசி அன்பர்களே …!   இன்று முக்கிய பணி ஒன்றை மறந்து விடுவீர்கள். குடும்ப உறுப்பினர் நினைவுபடுத்தி உதவிகளை செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பண வரவை விட சிக்கனம் என்பது கண்டிப்பாக வேண்டும். அதாவது செலவை நீங்கள் கட்டுப்படுத்தி தான் ஆகவேண்டும். கண்களின் பாதுகாப்பில் கவனமாக இருக்கவேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றலாம்.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனமாக இருங்கள். கணவன் மனைவி இருவரும் எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. வேலை பளு அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்திலும் தாமதமான போக்கே காணப்படும். இன்று சமூகத்தின் பாராட்டு பெறுவதற்காக மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு மறையும். எதையோ நினைத்துக்கொண்டு கவலையாகவே இருப்பீர்கள். எதை பற்றியும் கவலை கொள்ளாதீர்கள்.

காரியத்தை மட்டும் செய்யுங்கள். காதலர்களுக்கும் இன்று சிறப்பான சூழல் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |