மகரம் ராசி அன்பர்களே, இன்று மனதில் நம்பிக்கை குறைவு போன்றவை ஏற்படக்கூடும், திடீரென்று மனக்குழப்பத்திற்கு ஆளாக கூடும், தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக அமையும். இன்று சீராக தான் வந்துசேரும், பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி பெற கூடுதல் முயற்சி அவசியம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடி போன்றவை ஏற்படலாம். எச்சரிக்கையாக இருங்கள். பயணங்களில் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் கவனமாக பேசுங்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதமும் செய்யாதீர்கள். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேறுபாடு வேற்றுமை போன்றவை ஏற்படும் அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
பிள்ளைகளின் கல்வியில் சம்பந்தமான விஷயங்களில் ரொம்ப கவனம் செலுத்த வேண்டும். அது மட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை நீங்கள் நிறைவேற்றும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலம்