Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…மதிப்பும், மரியாதையும் கூடும்..வெற்றி வாய்ப்புகள் குவியும்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாளாக இருக்கும். இனத்தாரின் பகை மாறி, இன்பங்கள் அதிகரிக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் பெரிதாகும்.  பழைய பாக்கிகள் வசூலாகி பணவரவை கொடுக்கும்.  உத்தியோக அனுகூலம் ஏற்படும். இன்று வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை ஏற்படும். வியாபாரம் நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் இருக்கும்.  பொது காரியத்தில் உள்ளவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் பெறுவார்கள்.

மாணவ செல்வங்களுக்கு வெற்றிமேல் வெற்றி வந்து குவியும். ஆசிரியர்களின்  ஒத்துழைப்பும் இருக்கும். விளையாட்டுத் துறையிலும் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று  முக்கியமான பணிகள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும்.

அது மட்டுமில்லாமல் இன்று  சிவபெருமான் வழிபாடு மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |