Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… பதவி பெறும் வாய்ப்பு… லாபம் கிடைக்கும்…!!

மகரம் மகரம் ராசி அன்பர்கள்,

இன்று உங்களுடைய தனித்திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூலம் பலம் பெறும். கூடுதல் பணவரவு கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சமரச தீர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டாகும்.  இன்று பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை தாமதபட்டு  வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்கள் செய்யும் செயல்கள் உங்களுக்கு டென்ஷனை கொடுப்பதாக இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைக் கொடுக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வதும் அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது ரொம்ப நல்லதுங்க. பயணம் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதியவர்களின்  நட்பு கிடைக்கும். இன்று ஆதாயம் உங்களுக்கு சிறப்பாகத்தான் வந்து சேரும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அது  உங்களுக்கு அதிஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் ஒரு சேர வணங்குங்கள், உங்களுடைய காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்;  9  மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்:  இளம் சிவப்பு  மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |